தீபாவளி…ஆரியரின் இறக்குமதியா தீபாவளி!

இதற்கு நான் கூறும் பதில்கள்:

புராணக்கதைகள் ஆயிரம் உண்டு. அவை எதற்காக சொல்லப்பட்டன என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

விடாமுயற்சியால் கண்டிப்பாக வெற்றி கிட்டும் என்பது அறிந்த வயதிற்கு நன்கு புரியும். சின்ன வயதுக்கு புரியவைக்க அதே காரணத்தை முயல் ஆமை ஓட்டப்பந்தயத்தில் சொல்லிவைப்பார்கள். அதற்காக, முயலும் ஆமையும் எப்படி பேசும், எப்படி ஓடும், இதற்கு யார் நடுவர் என்றெல்லாம் ஆராய்ச்சி பண்ணுவதில் அர்த்தமில்லை.

நமது முனோர்கள் அறிவியல் கொண்டு வாழ்க்கை நடத்தினர். ஒவ்வொன்றுக்கும் காரணம் கண்டனர். சமயம் வளர்த்தனர். அண்டங்களையும் அறிந்து வைத்திருந்தனர். அவை அனைத்தும் கற்றிட நமக்கு ஒரு ஆயுள் போதாது. கொஞ்சம் கற்றுக்கொண்டு அவற்றையெல்லாம் கேலிசெய்தல் தவறாகும்.

தீயவை விலகி நன்மை பெருகிட, நமது உள்ளங்களில் ஜோதி பரவிட, வாழ்க்கை ஒளிபோல் பிரகாசிக்க வேண்டும் என்பதே தீபாவளி தத்துவம். யாவரும் அறிந்ததே. அதற்காக ஒரு புராண கதை. உண்மையை விட்டுவிட்டு பெரியார் புராணக்கதைகளில் உண்மை தேடுவது பரிதாபமான ஒரு நிலை.

இது அறியாமல் நாத்திகரான பெரியார் சொல்வதெல்லாம் உண்மை என்று கண்மூடித்தணமாக நம்பி, நமது உண்மை காரணங்களை கொச்சைபடுத்த வேண்டாம்.

நமது பண்டிகைக்கு ஆரியர்கள் ஆபாச கதையை கட்டி களங்கப்படுத்திவிட்டார்கள் என்று ஏன் நாம் நினைக்கக் கூடாது? அதற்கு ஏன் தீபாவளியை இழிவு படுத்த வேண்டும்? ஆரியரை அல்லவா நாம் இழிவு படுத்த வேண்டும் !! அப்படியென்றால் அந்த ஆபாச கதைதான் உண்மை என்று நாம் நம்புகிறோமா?

கற்றது கையளவு, கல்லாதது உலகளவு.

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

——————————————————————————————————————————————

ஆரியர் வருவதற்கு முன்னால் இருந்த தமிழர்கள் அறிவிற் சிறந்தவர்கள். அறிவியலையே வாழ்க்கையாய்க் கொண்டவர்கள்.
ஆரியர், ஆரியர் என்று சொல்லி நமது மூதாதையர்களின் வாழ்க்கையை, பழக்க வழக்கங்களை கொச்சை படுத்தவும் வேண்டா, ஆரியருக்கு வெண்சாமரம் வீசவும் வேண்டா !!!

தீபாவளி தமிழர் பண்டிகை இல்லையென்றே தமிழறிஞர்கள் வற்புறுத்துகிறார்கள், ஆனால் அவர்களது காரணமோ ஒவ்வொருத்தருக்கும் மாறுபடுகிறது. இது ஏன்? உண்மை என்றால் ஒன்றாகதானே இருக்க வேண்டும்.

புராணங்கள் மக்கள் மனதில் சுலபமாக ஒரு விசயத்தை பதிக்க சொல்லப்பட்டது. அதை ஆராய்ச்சி செய்வது வீண் வேலை. உண்மை காரணம் ஒன்று சொல்லப்பட்டுள்ளது, அதை ஒதுக்கி வைப்பது மூடம்.

பூமியை சுருட்ட முடியுமா, சுருட்டினால் எப்படி கடலுக்குள் புகுந்து கொள்ள முடியும் என்று கேட்கும் மூடர்களே !!!! உங்களுக்கு பூமி மட்டும் தான் தெரியும், அண்டத்தில் எத்தனை பூமி உள்ளது, எத்தனை அண்டங்கள் உள்ளது என்பது தெரியுமா? இந்த பூமியை சுருட்டி வேறொரு பூமியில் ஒளிந்து கொள்ள இயலாதா? யோசியுங்கள்!!!

காற்பந்தாட்டத்தில் மலேசியா இங்கிலாந்துக்கு எதிராக ஒரு கோல் போட்டது என்றால்….மலேசியா என்ற ஒரு நாடு அப்படியே எழுந்து போய், கோல் போட்டதா? சொல்லுங்கள். இல்லையே! ஒரு உவமைக்கு சொல்வது தானே. அது ஏன் அந்த பன்றியும் அந்த பூமியும் வேறு ஒரு அவதாரத்தில் கலவி செய்திருக்கக் கூடாது? இருண்டவன் கண்ணுக்கு அரண்டதெல்லாம் பேய்தானே!

பன்றி மலம் தின்னும் என்று கேவலம் செய்யும் மூடர்களே ! உங்களுக்குதானே அது மலம், பன்றிக்கு அது உணவல்லவா! உங்களுக்கு உணவு என்பதை, பன்றிக்கு மலமாய் தோன்றினால், கவலை கொள்பவர் யாராவது உண்டோ????

கிருஷ்ண அவதாரங்களில் எண்ணிலடங்கா உண்மைகள் பொதிந்துள்ளன. அவற்றை கண்டு எவ்வளவோ அறிஞர்கள் எழுதியுள்ளார்கள். படித்து தெளிவுறுங்கள். கிருஷ்ணரின் பிறப்பு பத்திரம் தேடி அலையவேனா!!!
கிருஷ்ணரின் புல்லாங்குழலுக்குள் உண்மைகள் உள்ளன, அவரது வாழ்க்கையில் உண்மைகளும் தத்துவங்களும் உள்ளன, தேடுங்கள்…தேடி விடைகொள்ளுங்கள்.

மூடக்கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம்தான்,
ஞானக்கண்ணில் பார்த்தால் யாவும் சுற்றம் தான்!!!

மீண்டும் ஒரு விவேகானந்தர் வேண்டும்!

(ஆரியர் ஆரியர் என்று பேசும் அறிஞர்களுக்கு, ஆரியர் வரலாற்று குறித்து பல கருத்துக்களை கொண்டுள்ளனர். எது தமிழர் வாழ்வியல், எது ஆரியர் புகுத்தியல் என்றும் தெள்ளத்தெளிவாய் சொல்லவும் இயலாது. பொங்கலில் கைவைத்தார்கள், இப்பொழுது தீபாவளிக்கு வந்துள்ளார்கள். குழப்புவதே இவர்கள் வேலை. )

Advertisements