பிடிவாதம் ஏன்? ~நண்பன் 6/12/12

பேசாமல் சீன பள்ளி அறவாரியத்திடம் ஒப்படைத்து, ஒரு ஒப்பந்தம் போட்டு விடுங்கள். அவர்களாவது அதை மேம்படுத்தி லாபத்தில் கணிசமான பங்கை தருவார்கள். வைக்கோல் மீது நாயை போல் ஏன் பிடிவாதம்?

20121224-172831.jpg

Advertisements

ஹிண்ட்ராப் கூட்டத்திற்கு 3 ஆயிரம் பேர்!~நண்பன் 26/11/2012 திங்கள்

Image
ஹிண்ட்ராப் கூட்டத்திற்கு 3 ஆயிரம் பேர்! பத்துமலை நடராஜா, டத்தோ பழனிவேல் கூவலுக்கு வெறும் 300 பேர்! ~நண்பன் 26/11/2012 திங்கள்

சோதனை மேல் சோதனை !!!

http://www.semparuthi.com/?p=79835

சிப்பாங் பூசை மேடை உடைப்பு : மஇகா ஆர்ப்பாட்டத்தில் வெறும் 150 பேர்!

அண்மையில் சிப்பாங்கில்  வீட்டுக்கு வெளியில்  8 அடி உயரத்துக்குக் கட்டப்பட்ட பூசை மேடை சிப்பாங் நகராண்மைக் கழகத்தினால் உடைக்கப்பட்டதை கண்டித்து சிலாங்கூர் மாநில அரசு பணிமனைக்கு முன்னால் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

மஇகா இளைஞர் பகுதி ஏற்பாடு செய்தியிருந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 150 பேர் கலந்துகொண்டு சிலாங்கூர் அரசுக்கு தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

பாக்கத்தான் தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் அணி திரண்டுவருவார்கள் என மஇகா இளைஞர் பகுதி தலைவர் முன்னர் கூறியிருந்தபோதும், இன்று காலை 200-க்கும் குறைவானவர்களையே அங்கு காண முடிந்தது.

மேலும், அங்கு கூடியிருந்த மஇகா இளைஞர் பகுதியினர், சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை அந்நேரத்தில் வசைபாட தவறவில்லை.  அவர்கள் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் என பலரை கொச்சை வார்த்தைகளால் திட்டி கூச்சலிட்டு குண்டர் கும்பல் செயல்பட்டதாக சம்பவ இடத்தில் இருந்த பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவர் செம்பருத்தியிடம் கூறினார்.

“பல்லின மக்கள் வந்துபோகும் மாநில அரசுப் பணிமனைக்கு முன்னால் நின்றுகொண்டு கடும் கொச்சை வார்த்தைகளால் கத்தி கூச்சலிடுவதுதான் கோயிலுக்காக போராடுகிறோம் என கூறிக்கொள்ளும் மஇகா-வின் பண்பா?” என வினவிய அவர், பூசை மேடை உடைப்புக்காக முன்னெடுத்த கண்டன ஆர்ப்பாட்டத்தை ஆதரித்தாலும், அவர்கள் நடந்துகொண்ட விதத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

ஒருபொது இடத்தில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்ற நாகரீகம் தெரியாதவர்களின் இவ்வாறான செயல்பாடுகளினால் ஒட்டுமொத்த மலேசியத் தமிழர்களுக்கு பெருத்த அவமானம் என்று கூறிய அவர், குண்டர் கும்பல் அரசியலை தொடர் கதையாக்கிக் கொண்டு வரும் இவர்களுக்கு வருகின்ற தேர்தலில் தமிழர்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என தனது ஆதங்கத்தை செம்பருத்தியிடம் தெரிவித்தார்.

பெரும் கூச்சல் தள்ளுமுள்ளுக்கிடையில், சிப்பாங் பூசை மேடை உடைப்புக்கு கண்டனம் தெரிவுக்கும் வகையிலான மனு ஒன்றை மஇகா இளைஞர் பகுதி தலைவர் தி. மோகன், சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராஹிமின் செயலாளரிடம் வழங்கினார். எனினும், பூசை மேடை உடைக்கபட்ட வீட்டின் உரிமையாளரோ அல்லது சம்பந்தப்பட்ட தரப்பினரோ அங்கு சமூகமளிக்கவில்லை என கூறப்படுகிறது.

வீட்டுக்கு வெளியில்  8 அடி உயரத்துக்குக் கட்டப்பட்ட பூசை மேடைக்கு முறையான அங்கீகாரம் வாங்காதவர்,  நகராட்சி மன்றம்  அந்தக் கட்டுமானத்தை  அப்புறப்படுத்தச் சொல்லி நோட்டீஸ் கொடுத்தும்  அதனை மதிக்கவில்லை. அது சம்பந்தமாக மாநில அரசிடமோ, நகராட்சி மன்றத்திடமோ மேல் முறையீடு செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.

SHARE THIS STORY :

Tell a Friend

RELATED POSTS

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

  • singam wrote on 7 December, 2012, 18:24இந்த தஞ்சாவூர் பிரம்மாண்ட கோவில் உடைப்பட்டதினால் வீறுகொண்டு எழுந்த நமது ம.இ.கா.இளைஞர்களின் சமயப் பற்றை நினைக்கும்பொழுது உடம்பில் உள்ள புல் அரிக்கிறது [புல்லரிக்கிறது]. கடந்த நாற்பது ஆண்டுகளில் ஏறத்தாழ ஐயாயிரம் கோவில்கள் இந்த பாரிசான் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் உடைக்கப்பட்டு வீதியிலே எறியப்பட்ட போது ஒரு பயலையும் பார்க்க முடிந்ததில்லை. ஆனால் இன்று….? சிறியதொரு பூஜை மேடை உடைக்கப்பட்டது ஞாயமில்லைதான். இதனால், பொங்கி எழுந்த நம் ‘படை வீரர்களை’ நினைக்கும்போது எனக்கு ஓர் யோசனை உதித்தது. ஆம்! அடுத்த பொதுத் தேர்தலில் கண்டிப்பாக [மத்தியில்] ஆட்சியை மாற்றியே ஆகவேண்டும். ஏனென்றால் பக்காத்தான் ஆட்சியில் ஏதாவது சிறிய தவறு நேர்ந்தாலும், படையோடு வந்து தட்டிக் கேட்பதற்கு, இந்த ம.இ.கா. இளைஞரணி இருக்கிறதே!

  • murugan wrote on 7 December, 2012, 18:39தமிழர்களின் செண்டிமெண்ட் தமிழ் பள்ளி மற்றும் கோவில்… இந்த இரண்டிலும் தமிழர்கள் சரியா சிந்திக்கிறதே இல்லை. சட்டேன்று உணர்ச்சி வசப்படுவார்கள். நாம் இங்கே ஒரு கருத்தை சீர்துக்கி பார்க்க வேண்டும். என்ன  வென்றால் இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம் முன்தய சமுதாயம் அப்பொழுதே சொந்த நிலத்தில் கோயிலோ அல்லது தமிழ் பள்ளியோ கட்டியிருந்தால், இன்னைக்கு இப்படி தெருவில் நின்று ஆர்ப்பாட்டம் பண்ண தேவையில்லை. நாளைக்கு நம்ம அடுத்த சந்ததிக்கு இதைதான் விட்டு செல்ல போகிறோமா…?

  • ஊரணி wrote on 7 December, 2012, 18:44என்னத்தைச் சொல்வது? எதைச் சொல்வது? நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்? தமிழர்களின் வாழ்வாதாரத்துக்கான செயல்பாடுகளை எப்படி வகைப்படுத்தப்போகிறோம்? இவர்களின் இதுபோன்ற செயல்களினால் நம்முடைய இனம் எதைச் சாதிக்கப்போகிறது? ஆங்காங்கே காளான்கள்போல் முளைத்துக்கொண்டிருக்கும் இதுபோன்ற இல்லத்துக் கோயில்களால் என்ன பயன்களை எதிர்பார்க்கிறோம்? ம.இ.கா. தோற்றுனர் ஜான் திவி காலத்திலிருந்து மாண்புமிகு டத்தோஸ்ரீ சாமிவேலு காலம்வரையில் கட்டிக்காத்துவந்த மஇகாவின் பாரம்பரியத்தின் மகத்துவம் இதுபோன்ற சின்னத்தனங்களால் பாழ்பட்டுப்போக யார் காரணம்? இந்த தமிழர் சமுதாயம் செய்திட்ட பாவம்தான் என்ன? ஏன் இந்தச் சமுதாயத்தை சின்னாபின்னமாக்கிக் சிதைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? இதற்கெல்லாம் பதி சொல்ல ஒரு காலம் வெகு தூரத்திலில்லை?

  • கணபதி wrote on 7 December, 2012, 18:55ஐயா யாராவது இன்று ஷா ஆலமில் மஇகா இளைஞர் பிரிவும் என்ஜிஒக்களும் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டீர்களா? நாட்டிலுள்ள வினோத தோற்றம் கொண்ட அத்தனை இளைஞர்களும் அங்குதான் இருந்தார்கள். மஇகா தலைவர்களும் பதினைந்து வயது கூட நிரம்பாத சிறுவர்களும் மாநில அரசை சாடி கொச்சை வார்த்தைகளில் பேசிய வார்த்தைகளைக் கேட்டிருந்தால் சிப்பாங் சாமி மேடையில் இருந்த சாமி தலை தெறிக்க ஓடியிருக்கும் அவ்வள மோசமான வார்த்தைகள். போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களும் அந்த பேச்சை ரசித்துக் கொண்டிருந்தார்கள்,

  • singam wrote on 7 December, 2012, 19:17பகாங்கின் ரவுப் என்கிற பட்டணத்திற்கு சென்றீர்களேயானால், ‘Ratha Fish Head Curry House’ என்றொரு  உணவகம் உள்ளாது. அதன் உரிமையாளரின் சகோதரர் சுங்கை கிளாவ் என்னுமிடத்தில் சொந்த தோட்டம் ஒன்றை வைத்துள்ளார் . அத்தோட்டத்தில் தனது சொந்த செலவில் ஒரு முருகன்  கோவிலைக்  கட்டினார். சொந்த நிலத்தில் யாருக்கும் எந்த இடையூறும் இல்லாத இடத்தில் கட்டப்பட்ட அந்த கோவிலை  மஇகாவின்  பாரிசான்  அரசாங்கம்  வந்து  உடைத்துப் போட்டுப்  போய்விட்டது.                   .

  • kumar sri andalas wrote on 7 December, 2012, 19:32மஇகா காரங்களுக்கு வேற வேலை இல்லை. சாமி மேடை உடைத்ததை வைத்து அரசியல் நடாகம் ஆடவேண்டாம். கால் தடுக்கி கிழே விழுந்தல் பெரிய கோவில், சிறிய கோவில் அல்லது பூஜை மேடைக்கு முன் விழும் காலம் இது. சில ஆலயங்கள் வரும் வருமானத்தை அலயை கமிட்டி அலையை பூசாரி சுருடிகொல்லுகிறார்கள் எனக்கு தெரிந்த ஆலயம் ஒன்று கோயில் கட்டினார்கள், கோயில் கட்டும் செலவை அலையை சுற்று வட்டார மக்கள் கொடுத்து உதவினார்கள். கடைசியில் கோயில் கட்டிய பணம் ஒரு கோவில் காமிடி தான் சொந்த பணம் ஒரு மில்லியன் போட்டதாகவும், அந்த பணம் ஆலயம் திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் கேட்கிறார். கொடுத்த பணத்திற்கு அத்தாச்சி பத்திரம் இல்லை ஓடிட்டும் பண்ணவில்லை.. பொது மக்கள் கோவிலுக்கு கொடுத்த கோவில் தங்க நகைகளை விற்று எடுத்து கொண்டார். இப்படிதான் அதிகமான கோவில்களில் நடைபெறுகின்றது. ஸ்ரீ அண்டலஸ்

  • rajoo wrote on 7 December, 2012, 19:41ம இ கா காரணங்க ஆடு நலயுது என்று ஓநாய் வருத்தபப் பட்டுசான்.இது எல்லாம் எலக்ஷ்னுக்கு ஆடும் நாடகம் மக்கள் தெரியும் அதனால 150 பேர் மட்டும் கலந்து கொண்டாங்கள் வெற்றி பகாதனுக்கு தான் அது உறுதி வாழ்க பகாதனுக்கு

  • poornarao s”ban wrote on 7 December, 2012, 19:49ஒவ்வொரு முறையும் நம் தெரிந்தும் தெரியாமல் இன் நாட்டில் தவறு செய்துக்கொன்டுதான் வருகிறோம்.நம் உரிமை என்னவென்று தெரியாமல் தொட்டதுக்கெல்லாம் கண்டன ஆர்பாட்டம்.இப்படியே தொடர்ந்து செய்து கொண்டுப்போனால்,உண்மையாகவே சொல்கிறேன் பாதிப்பு அரசியல் உள்ளவர்க்கு அல்ல நமக்குத்தான்.ஊரு ரெண்டு பட்டால் குத்தாடிக்கு தன் கொண்டாட்டம் அவுவகையுள் நம் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும் இன் நாட்டு அரசாங்கம் கவனித்துக்கொண்டுதான் வருகிறது,ஆகா நமக்கு தேவை உள்ளதை ஆர்ப்படம் செய்தல் நமக்குத்தான் பெரும்மை.இல்லை என்றல்…..

Who am I ?

1 2 3, lets rock… Hit It…

Dhinam dhinam maru-dhinam kannadiyai parkiren
ennai naane ketkiren, who am I
Oru nodi sirikiren maru nodi azhukiren
mayakathil kidakiren, who am I
Nerupinil pizhaikiren, Who  am I
vazhum virupathil kodhikiren, Who  am I
Kannavugal vithaikiren, kalaindhadhum thavikiren
Kadavulai ketkiren, kulambudhe…

Who  am I, Who  am I, Who  am I, Who  am I, Who  am I
Who  am I, Who  am I, Who  am I, Who  am I, Who  am I

Pirapathum irapathum .. nadakume
saadhanaigal seidhu vida ninaikiren
Thinasari kavalaigal thurathida thurathida
Athanaiyum ennakule pudhaikiren

.. enna solvena, Ullam enna solvena
Ennai enna solveno, ennakonrum puriyalai
Who  am I, Who  am I, Who  am I, Who  am I, Who  am I
Who  am I, Who  am I, Who  am I, Who  am I, Who  am I

Enakaena nanbargal yaarumillai endru enni
ennai naane nanbanaai ninaikiren
Enakaena athirigal yaarumillai endru enni
ennai nane athiriyaai verukiren

Ennai naane velvena, ennai naane kolvena
Enthapakkam selveno, ennakonrum puriyalai
Who  am I, Who  am I, Who  am I, Who  am I, Who  am I
Who  am I, Who  am I, Who  am I, Who  am I, Who  am I

Dhinam dhinam maru-dhinam kannadiyai parkiren
ennai naane ketkiren, who am I
Oru nodi sirikiren maru nodi azhukiren
mayakathil kidakiren, who am I
Nerupinil pizhaikiren, Who  am I
vazhum virupathil kodhikiren, Who  am I
Kannavugal vithaikiren, kalaindhadhum thavikiren
Kadavulai ketkiren, kulambudhe…

Who  am I, Who  am I, Who  am I, Who  am I, Who  am I
Who  am I, Who  am I, Who  am I, Who  am I, Who  am I

கார்த்திகை

கார்த்திகக்கும் களங்கம் கற்பிக்கிறார்கள் மூடர்கள்!

சங்க இலக்கியத்தில் கார்த்திகை தீபம்

Post by சிவா on Tue Nov 27, 2012 10:49 pm

வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக்
கையற வந்த பொழுது – நற்றிணை 58

கார்த்திகை மாலை-விளக்கு
வீரை என்னும் ஊரிலிருந்துகொண்டு ஆண்ட வேளிர்குடி அரசன் வெளியன். அவன் மகன் தித்தன், அவன் முரசில் திரி போட்டு விளக்கேற்றி வைத்தான். மாலையில் அந்த விளக்கை ஏற்றியபோது வெண்சங்கு ஊதப்பட்டது. பனி பொழிந்தது. (இந்தக் காலத்தில் போருக்குச் சென்ற தன் தலைவன் மீள்வான் எனத் தலைவி நம்புகிறாள்.)

இது சங்க காலத்தில் நிகழ்ந்த கார்த்திகை விழா ஒளிவிளக்கை எடுத்துக்காட்டுகிறது.

~சங்க காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட புனித நாள், இன்று புதிய மூடர்களுக்கு அசிங்கமான நாளாகிவிட்டது! 😉