பேரின்பத்திற்கு பெருந்துன்பம்!

  • Friday, Jul 26, 2013 9:43 pm 

Perkasa-Pehrinbamஇனங்களுக்கிடையிலானப் பிரச்னைகளைச் சரிகட்டுவதற்கென்று தயாரிக்கப்பட்ட சாசனத்தில் கையெழுத்திட்ட சில நிமிடங்களுக்குள் அதில் கையெழுத்திட்ட பெர்காசா மற்றும் இந்திய அரசு சார்பற்ற அமைப்பு பேரின்பம் ஆகிய இருதரப்பினர்களுக்கிடையில் தகராறு மூண்டது.

இச்சாசனம் கையெழுத்திடப்பட்டதை அறிவிப்பதற்காக கூட்டப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் பெர்காசா துணைத் தலைவர் ஜுல்கிப்லி நூர்டின் சுங்கை பூலோ ஸ்ரீ பிரிஸ்தானா பள்ளியின் தலைமை ஆசிரியர் முகமட் நாசிர் முகமட் நோர் எடுத்த நடவடிக்களைத் தற்காத்துப் பேசிய போது தகராறு மூண்டது.

இதனால் அதிர்ப்திய்டைந்த பேரின்ப உறுப்பினர்கள் ஜுல்கிப்லியுடன் தகராறில் ஈடுபட்டனர். செய்தியாளர் கூட்டம் முடிவுற்றதும் அவர்கள் ஜுல்கிப்லியை சுற்றிவளைத்துக் கொண்டு விளக்கம் கோரினர்.

ஜுல்கிப்லி அவரது நிலைப்பாடை தற்காத்துக் கொண்டதுடன் அங்கிருந்து வெளியேரினார்.

செய்தியாளர் கூட்டத்திற்குப் பின்னர் நடைபெற்ற புக்கா புவாசா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி பேரின்பம் தலைவர் யு. தாமோதரனை கட்டாயப்படுத்த வேண்டியிருந்தது.

http://www.semparuthi.com/?p=96941