அமெரிக்கர்கள் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500 அடி ஆழத்தில் மின்சார கேபிள்கள் கிடைத்தன. உடனே அவர்கள் அறிவித்தார்கள், “எங்களது முன்னோர்கள் மின்சாரத்தை பல நூற்றாண்டுகளுக் கு முன்னரே பயன்படுத்தி உள்ளார்கள்.”

இரஷ்யர்கள் அவர்கள் நாட்டில் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500 அடி ஆழத்தில் டெலிபோன் கேபிள்கள் கிடைத்தன. அவர்கள் சொன்னார்கள், “எங்களது முன்னோர்கள் அந்தக்காலத்திலே யே டெலிபோனை பயன்படுத்தியுள் ளார்கள்”

தமிழர்களும் தோண்டினார்கள். 1000 அடி தாண்டியும் ஒன்றும் கிடைக்கவில்லை. உடனே அறிவித்தார்கள், “எங்களது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வயர்லெஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள்” என்று

Advertisements

புராணத்தில் 27 வகையான உபவாச விரதங்கள்

புராணத்தில் 27 வகையான உபவாச விரதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை,

1.உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது. இதை யோகிகள் மட்டுமே கடைப்பிடிப்பார்களாம்.

2.தேன் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

3.பசுவின் பாலை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

4.எந்த உணவுமில்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

5.காலை நேரம் மட்டும் உணவருந்தி உபவாசம் இருத்தல்.

6.பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

7.இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

8.மூன்று நாட்கள்தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

9.மூன்று நாட்கள்தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

10.மூன்று நாட்கள்தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

11.கடுமையான விரதங்களுக்கு 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

12.மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

13.இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

14.ஒருநாள் பகல் நேரத்தில் சுத்தமான எள்ளுப் புண்ணாக்கு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

15.ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

16.ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

17.ஒரு நாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.

18.ஒரு நாள் முழுவதும் பொரிமாவு (புழுங்கல் அரிசியை வறுத்து நன்கு பொடித்து நெய், தேங்காய், சர்க்கரை ஆகியவற்றைப் போட்டுப் பிசைந்து வைத்திருப்பது) மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

19.ஒரு நாள் முழுவதும் திணை மாவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

20.தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட்சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என உபவாசம் இருத்தல்.

21.ஒரு நாள் முழுவதும் வில்வ தழையையும் நீரையும் மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.

22.ஒரு நாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி உபவாசம் இருத்தல்.

23.ஒரு நாள் முழுவதும் அத்தி இளந்தளிகளையும், நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

24.இரு வேளை உணவுடன் உபவாசம் இருத்தல்.

25.முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறுநாள் இரவு மட்டும் உணவுடன் உபவாசம் இருத்தல்.

26.மாமிச உணவுகள், மசாலாக்கள் இல்லாத சைவ உணவுகளை மட்டுமே குறைந்த அளவு சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

27.வாழைக்காய், பூண்டு, வெங்காயம், பெருங்காய்ம் ஆகியவை சேர்ந்த உணவுகளை மட்டும் சேர்த்துக் கொள்ளாமல் உபவாசம் இருத்தல்.

– இந்த உபவாச விரதங்களில் எதைக் கடைப்பிடித்தால் நல்லது என்கிறீர்களா?

உங்கள் உடல் நிலைக்கும், சூழ்நிலைக்கும் தகுந்த எந்த உபவாசத்தையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

ஆனால் எதுவுமே சாப்பிடாமல் நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பதே சிறந்த விரத முறையாகும்

வெண்ணிற இரவுகள் : நம்பிக்கையான முயற்சி! Tuesday, Feb 25, 2014 5:33 pm சிறப்புக் கட்டுரைகள் 1 comment

 

vennira landing banner 630இப்போது காலை மணி 6. ஒரு விடுமுறை காலையில் எழுந்து ‘வெண்ணிற இரவுகள்’ பற்றி எழுத என்ன காரணமாக இருக்க வேண்டும்? மலேசியாவில் பிறந்துவிட்ட காரணத்தினால் இங்கு முன்னெடுக்கப்படும் கலை ரீதியான எல்லா முயற்சிகளும் ஆதரவு தரும் எண்ணம் எனக்கில்லை. அது இலக்கியமாக இருந்தாலும் , சினிமாவாக இருந்தாலும் அடிப்படையான தரம் இல்லாமல் அது குறித்து நான் ஒருவார்த்தைகூட பேசுவதில்லை. ஒருவேளை ஒரு குப்பை தேவைக்கு மீறி கொண்டாடப்பட்டால் இளம் ரசிகர்களின், வாசகர்களின் குழப்ப நிலையைக் கருத்தில் கொண்டு அதை விமர்சிக்கலாம். அது குப்பை என சுட்டிக்காட்டலாம். அதேவேளையில் , மலேசியாவில் கலை முயற்சிகள் அடுத்த கட்டங்களை நோக்கி நகரும் போது அது குறித்து மௌனமாக இருப்பதும் அதைவிட கேவலமானதுதான். நாம் அது குறித்து பேச வேண்டியுள்ளது. அதன் நகர்ச்சிக்கு நம்மாலானவற்றைச் செய்ய வேண்டியுள்ளது.

இப்படம் கவர்வதே அதன் தலைப்பினால்தான். தாஸ்தோவ்ஸ்கியின் நாவல் ‘வெண்ணிற இரவுகள்’. அற்புதமான காதல் கதை. இந்த நாவலுக்கும் படத்துக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. அதை ஏற்கனவே ‘இயற்கை’ என்ற தலைப்பில் 2003 தமிழ்த்திரை உலகம் சுட்டுவிட்டது.

அன்பை அல்லது அடங்காத காதலை நாம் எப்படிக் காட்டலாம்? சில பரிசு பொருள்களின் மூலம், சில கவிதைகள் மூலம், சில தியாகங்களின் மூலம் ,சில சொற்கள் மூலம், சில முத்தங்கள் மூலம் இப்படி வழக்கமாகச் சொல்லிக்கொண்டே போகலாம். ‘வெண்ணிற இரவுகள்’ அடங்காத காதலைதான் சொல்கிறது. வேறு முறையில். தன் மொழியில் தன் வழியில்.

படத்தின் சாதகமான விசயங்களாக சிலவற்றைக் கூறலாம். ஒன்றாவது இது அச்சு அசலான மலேசியப் படம். அச்சு அசலான மலேசியப் படத்தை உருவாக்க ஜனரஞ்சக தமிழ்த்திரைப்படங்கள் மீது வெறுப்பு தேவை. அந்த வெறுப்பு இயக்குனர் பிரகாஷ்க்கு உண்டென்றே நினைக்கிறேன். வசனங்களிலோ , உணர்வுகளிலோ பார்த்து பார்த்து புளித்துப்போன தமிழ் சினிமா வாடை இல்லை. அதே போல அதிகமான மலேசியத் திரைப்படங்களில் காட்டுவது போல கட்டங்களைக் காட்டி ‘இங்கதான் நின்னு பேசுறோம்’ என்ற சிறுபிள்ளைத்தனமான கதை சொல்லும் முறையெல்லாம் இல்லை. சிங்கப்பூரைக்காட்டும் போதுகூட அங்கு பிரபல சின்னமாக இருக்கும் வெள்ளை சிங்க சிலையின் பின்புறத்தை மட்டுமே பாதி காண்பிக்கிறார்கள். இது பெரிய விசயமா எனக்கேட்கலாம். ஐயா… மலேசிய திரை உலகம் அவ்வளவு கொடுமை செஞ்சிருக்குய்யா… அந்த பலவீனங்களைக் களைந்து வருவதே முதல் வெற்றியாகப் படுகிறதே என்ன செய்வது?

அதேபோல இன்னும் ஒன்றைச் சொல்ல வேண்டும். ஈரான், ஜப்பான், தென் அமெரிக்க படங்களைப் பார்த்துவிட்டு நம்ம ஊரு இயக்குனர்கள் காட்சிகளை நீட்டித்து காட்டுவதன் மூலமாக ‘கலை படம்’ செய்றோம் என்ற கொடுமையோ… ‘நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன் தெரியுமா?’ எனத்தொடங்கி காதலுக்கான அன்புக்கான லெட்சரர் செஞ்சி கதறி அழுது…கண்ணீர் மல்கி வசனம் பேசும் பரிதாபமோ இப்படத்தில் இல்லை. அப்படியானால் இது ஒரு கலைப்படமா? எனக்கேட்டால் அதுவும் இல்லை.

இது ஒரு முதல் மலேசியத்திரைப்படம். ரப்பர் தோட்டத்தைக் காட்டுவதால் மட்டும் ஒன்று மலேசியத்தமிழ் திரைப்படமாகிவிடாது. இது  இளைஞர்களின் கல்லூரி வாழ்வைச் சார்ந்துள்ளது. ஒட்டவைத்த டிவி சீரியல்களையும் , தமிழ்நாட்டு குப்பையின் மறுவடிவங்களையும், மட்டமான நகைச்சுவை தொகுப்புகளையும் மலேசியத்திரைப்படம் என பார்த்து பார்த்து சலித்து கிடந்த நமக்கு ஒரு மலேசியத்திரைப்படம் என்பது எப்படி இருக்க வேண்டும் என நிரூப்பித்திருக்கும் சினிமா முயற்சி. ஆனால் இப்படம் இன்னும் அரசியல் ரீதியில் பலமாக சில விடயங்களைச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை.

மலேசிய படத்தில் முதன் முதலாக சாதிய சிக்கல் பேசப்படுகிறது என நினைக்கிறேன். (இதற்கு முன் பேசப்பட்டிருந்தால் மன்னிக்கவும்) அதை இன்னும் கொஞ்சம் வலுவாகப் பேசியிருக்கலாம். குறிப்பாக மியன்மார் இந்தியர்களின் சமூக சூழல் உணர்த்தப்படவே இல்லை. அங்கும் மலேசியாவைக் காட்டிலும் கடுமையான சாதிய அணுசரிப்பு முறைகள் உள்ளன. ஆங்காங்கே அதன் மீதான வெறுப்பை கதாநாயகன் பேசுவதன் மூலமாக மீண்டும் மீண்டும் மையத்திற்கு பயணித்துவர முடியும் என நினைக்கிறேன். ஒரு வெறுப்பின் கசப்பு அவன் வாழ்வு முழுவதும் எவ்வாறு தொடர்கிறது என மியன்மார் சாதிய அமைப்பு மீதான வருத்தங்களைச் சொல்வதன் மூலமாகக் காட்டியிருக்கலாம். அதே நேரத்தில் மலேசியாவில் பொருளாதர உயர்வெல்லாம் சாதியத்தின் முன்பு என்னவாகிவிடுகின்றது என்பதையும் வேறு இடங்களில் பேச முயன்றிருக்கலாமோ எனத் தோன்றுகிறது.

இது எதிர்ப்பார்ப்புதான். திரைப்படம் எனும் மாபெரும் கூட்டு அமைப்புக்கு முன் நமது எதிர்ப்பார்ப்பை மீறிய நடைமுறை சிக்கல்கள் இருக்கலாம். அதன் வேறு தொழில்நுட்பம் அறியாத நான் அல்லது என்னைப் போன்றவர்கள் கவனித்துப்பார்ப்பது திரைக்கதையையும் அதை சொன்ன முறையையும் அதன் அரசியலை மட்டுமே. கதாநாயகன்/ கதாநாயகி நல்ல தேர்வு. மகேனிடம் இயல்பான நடிப்பு உள்ளது. எளிதாக அனைவரையும் சிரிக்க வைத்துவிடுகிறார். சில இடங்களில் வசனத்தை உச்சரிக்கும் முறையை நிதானித்தால் முழுமையாக புரியும். சங்கீதா படத்தின் பலம். நல்ல நடிப்பாற்றல் உண்டு . தொடர்ந்து நல்ல இயக்குனர்கள் கையில் சிக்க வேண்டும்.

பல தமிழ்த்திரைப்படங்களில் பாதியில் எழுந்து வந்ததுண்டு. தொலைப்பேசியில் விளையாடிக்கொண்டிருந்ததுண்டு, அடிக்கடி வெளியேறி மனநிலையை திடப்படுத்திக்கொண்டு நிதானித்து வந்ததுண்டு. பிரகாஷ் மற்றும் குழுவினர் இருக்கையில் அமரவைத்துவிட்டார்கள். நம்பிக்கையுடன் அமர்ந்து ஒரு படத்தைப் பார்த்த திருப்தியில் வெளிவரலாம்.

6 மார்ச்சில் மீண்டும் திரையில் சென்று பார்ப்பேன். நண்பர்களும் பாருங்கள்.

ம. நவீன் 

(நன்றி : வல்லினம்)

 

SHARE THIS STORY :    

 

 

 

  Tell a Friend

 

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

 

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 

Pon Rangan wrote on 25 February, 2014, 19:16 இரவுகளை வெளிச்சமாக்கி காதல் மௌனத்தை கேமராவில் வெளிச்சம் பட செய்த படமாம்….காத்திருப்போம் 6ம் தேதிக்கு பிறகு கையாள்வோம்.

   

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : “amma” என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் “அம்மா” என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

 

உங்கள் பெயர் (Name) உங்கள் மின்னஞ்சல் (Email – will not display) Comment