சோதனை மேல் சோதனை !!!

http://www.semparuthi.com/?p=79835

சிப்பாங் பூசை மேடை உடைப்பு : மஇகா ஆர்ப்பாட்டத்தில் வெறும் 150 பேர்!

அண்மையில் சிப்பாங்கில்  வீட்டுக்கு வெளியில்  8 அடி உயரத்துக்குக் கட்டப்பட்ட பூசை மேடை சிப்பாங் நகராண்மைக் கழகத்தினால் உடைக்கப்பட்டதை கண்டித்து சிலாங்கூர் மாநில அரசு பணிமனைக்கு முன்னால் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

மஇகா இளைஞர் பகுதி ஏற்பாடு செய்தியிருந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 150 பேர் கலந்துகொண்டு சிலாங்கூர் அரசுக்கு தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

பாக்கத்தான் தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் அணி திரண்டுவருவார்கள் என மஇகா இளைஞர் பகுதி தலைவர் முன்னர் கூறியிருந்தபோதும், இன்று காலை 200-க்கும் குறைவானவர்களையே அங்கு காண முடிந்தது.

மேலும், அங்கு கூடியிருந்த மஇகா இளைஞர் பகுதியினர், சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை அந்நேரத்தில் வசைபாட தவறவில்லை.  அவர்கள் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் என பலரை கொச்சை வார்த்தைகளால் திட்டி கூச்சலிட்டு குண்டர் கும்பல் செயல்பட்டதாக சம்பவ இடத்தில் இருந்த பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவர் செம்பருத்தியிடம் கூறினார்.

“பல்லின மக்கள் வந்துபோகும் மாநில அரசுப் பணிமனைக்கு முன்னால் நின்றுகொண்டு கடும் கொச்சை வார்த்தைகளால் கத்தி கூச்சலிடுவதுதான் கோயிலுக்காக போராடுகிறோம் என கூறிக்கொள்ளும் மஇகா-வின் பண்பா?” என வினவிய அவர், பூசை மேடை உடைப்புக்காக முன்னெடுத்த கண்டன ஆர்ப்பாட்டத்தை ஆதரித்தாலும், அவர்கள் நடந்துகொண்ட விதத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

ஒருபொது இடத்தில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்ற நாகரீகம் தெரியாதவர்களின் இவ்வாறான செயல்பாடுகளினால் ஒட்டுமொத்த மலேசியத் தமிழர்களுக்கு பெருத்த அவமானம் என்று கூறிய அவர், குண்டர் கும்பல் அரசியலை தொடர் கதையாக்கிக் கொண்டு வரும் இவர்களுக்கு வருகின்ற தேர்தலில் தமிழர்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என தனது ஆதங்கத்தை செம்பருத்தியிடம் தெரிவித்தார்.

பெரும் கூச்சல் தள்ளுமுள்ளுக்கிடையில், சிப்பாங் பூசை மேடை உடைப்புக்கு கண்டனம் தெரிவுக்கும் வகையிலான மனு ஒன்றை மஇகா இளைஞர் பகுதி தலைவர் தி. மோகன், சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராஹிமின் செயலாளரிடம் வழங்கினார். எனினும், பூசை மேடை உடைக்கபட்ட வீட்டின் உரிமையாளரோ அல்லது சம்பந்தப்பட்ட தரப்பினரோ அங்கு சமூகமளிக்கவில்லை என கூறப்படுகிறது.

வீட்டுக்கு வெளியில்  8 அடி உயரத்துக்குக் கட்டப்பட்ட பூசை மேடைக்கு முறையான அங்கீகாரம் வாங்காதவர்,  நகராட்சி மன்றம்  அந்தக் கட்டுமானத்தை  அப்புறப்படுத்தச் சொல்லி நோட்டீஸ் கொடுத்தும்  அதனை மதிக்கவில்லை. அது சம்பந்தமாக மாநில அரசிடமோ, நகராட்சி மன்றத்திடமோ மேல் முறையீடு செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.

SHARE THIS STORY :

Tell a Friend

RELATED POSTS

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

  • singam wrote on 7 December, 2012, 18:24இந்த தஞ்சாவூர் பிரம்மாண்ட கோவில் உடைப்பட்டதினால் வீறுகொண்டு எழுந்த நமது ம.இ.கா.இளைஞர்களின் சமயப் பற்றை நினைக்கும்பொழுது உடம்பில் உள்ள புல் அரிக்கிறது [புல்லரிக்கிறது]. கடந்த நாற்பது ஆண்டுகளில் ஏறத்தாழ ஐயாயிரம் கோவில்கள் இந்த பாரிசான் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் உடைக்கப்பட்டு வீதியிலே எறியப்பட்ட போது ஒரு பயலையும் பார்க்க முடிந்ததில்லை. ஆனால் இன்று….? சிறியதொரு பூஜை மேடை உடைக்கப்பட்டது ஞாயமில்லைதான். இதனால், பொங்கி எழுந்த நம் ‘படை வீரர்களை’ நினைக்கும்போது எனக்கு ஓர் யோசனை உதித்தது. ஆம்! அடுத்த பொதுத் தேர்தலில் கண்டிப்பாக [மத்தியில்] ஆட்சியை மாற்றியே ஆகவேண்டும். ஏனென்றால் பக்காத்தான் ஆட்சியில் ஏதாவது சிறிய தவறு நேர்ந்தாலும், படையோடு வந்து தட்டிக் கேட்பதற்கு, இந்த ம.இ.கா. இளைஞரணி இருக்கிறதே!

  • murugan wrote on 7 December, 2012, 18:39தமிழர்களின் செண்டிமெண்ட் தமிழ் பள்ளி மற்றும் கோவில்… இந்த இரண்டிலும் தமிழர்கள் சரியா சிந்திக்கிறதே இல்லை. சட்டேன்று உணர்ச்சி வசப்படுவார்கள். நாம் இங்கே ஒரு கருத்தை சீர்துக்கி பார்க்க வேண்டும். என்ன  வென்றால் இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம் முன்தய சமுதாயம் அப்பொழுதே சொந்த நிலத்தில் கோயிலோ அல்லது தமிழ் பள்ளியோ கட்டியிருந்தால், இன்னைக்கு இப்படி தெருவில் நின்று ஆர்ப்பாட்டம் பண்ண தேவையில்லை. நாளைக்கு நம்ம அடுத்த சந்ததிக்கு இதைதான் விட்டு செல்ல போகிறோமா…?

  • ஊரணி wrote on 7 December, 2012, 18:44என்னத்தைச் சொல்வது? எதைச் சொல்வது? நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்? தமிழர்களின் வாழ்வாதாரத்துக்கான செயல்பாடுகளை எப்படி வகைப்படுத்தப்போகிறோம்? இவர்களின் இதுபோன்ற செயல்களினால் நம்முடைய இனம் எதைச் சாதிக்கப்போகிறது? ஆங்காங்கே காளான்கள்போல் முளைத்துக்கொண்டிருக்கும் இதுபோன்ற இல்லத்துக் கோயில்களால் என்ன பயன்களை எதிர்பார்க்கிறோம்? ம.இ.கா. தோற்றுனர் ஜான் திவி காலத்திலிருந்து மாண்புமிகு டத்தோஸ்ரீ சாமிவேலு காலம்வரையில் கட்டிக்காத்துவந்த மஇகாவின் பாரம்பரியத்தின் மகத்துவம் இதுபோன்ற சின்னத்தனங்களால் பாழ்பட்டுப்போக யார் காரணம்? இந்த தமிழர் சமுதாயம் செய்திட்ட பாவம்தான் என்ன? ஏன் இந்தச் சமுதாயத்தை சின்னாபின்னமாக்கிக் சிதைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? இதற்கெல்லாம் பதி சொல்ல ஒரு காலம் வெகு தூரத்திலில்லை?

  • கணபதி wrote on 7 December, 2012, 18:55ஐயா யாராவது இன்று ஷா ஆலமில் மஇகா இளைஞர் பிரிவும் என்ஜிஒக்களும் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டீர்களா? நாட்டிலுள்ள வினோத தோற்றம் கொண்ட அத்தனை இளைஞர்களும் அங்குதான் இருந்தார்கள். மஇகா தலைவர்களும் பதினைந்து வயது கூட நிரம்பாத சிறுவர்களும் மாநில அரசை சாடி கொச்சை வார்த்தைகளில் பேசிய வார்த்தைகளைக் கேட்டிருந்தால் சிப்பாங் சாமி மேடையில் இருந்த சாமி தலை தெறிக்க ஓடியிருக்கும் அவ்வள மோசமான வார்த்தைகள். போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களும் அந்த பேச்சை ரசித்துக் கொண்டிருந்தார்கள்,

  • singam wrote on 7 December, 2012, 19:17பகாங்கின் ரவுப் என்கிற பட்டணத்திற்கு சென்றீர்களேயானால், ‘Ratha Fish Head Curry House’ என்றொரு  உணவகம் உள்ளாது. அதன் உரிமையாளரின் சகோதரர் சுங்கை கிளாவ் என்னுமிடத்தில் சொந்த தோட்டம் ஒன்றை வைத்துள்ளார் . அத்தோட்டத்தில் தனது சொந்த செலவில் ஒரு முருகன்  கோவிலைக்  கட்டினார். சொந்த நிலத்தில் யாருக்கும் எந்த இடையூறும் இல்லாத இடத்தில் கட்டப்பட்ட அந்த கோவிலை  மஇகாவின்  பாரிசான்  அரசாங்கம்  வந்து  உடைத்துப் போட்டுப்  போய்விட்டது.                   .

  • kumar sri andalas wrote on 7 December, 2012, 19:32மஇகா காரங்களுக்கு வேற வேலை இல்லை. சாமி மேடை உடைத்ததை வைத்து அரசியல் நடாகம் ஆடவேண்டாம். கால் தடுக்கி கிழே விழுந்தல் பெரிய கோவில், சிறிய கோவில் அல்லது பூஜை மேடைக்கு முன் விழும் காலம் இது. சில ஆலயங்கள் வரும் வருமானத்தை அலயை கமிட்டி அலையை பூசாரி சுருடிகொல்லுகிறார்கள் எனக்கு தெரிந்த ஆலயம் ஒன்று கோயில் கட்டினார்கள், கோயில் கட்டும் செலவை அலையை சுற்று வட்டார மக்கள் கொடுத்து உதவினார்கள். கடைசியில் கோயில் கட்டிய பணம் ஒரு கோவில் காமிடி தான் சொந்த பணம் ஒரு மில்லியன் போட்டதாகவும், அந்த பணம் ஆலயம் திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் கேட்கிறார். கொடுத்த பணத்திற்கு அத்தாச்சி பத்திரம் இல்லை ஓடிட்டும் பண்ணவில்லை.. பொது மக்கள் கோவிலுக்கு கொடுத்த கோவில் தங்க நகைகளை விற்று எடுத்து கொண்டார். இப்படிதான் அதிகமான கோவில்களில் நடைபெறுகின்றது. ஸ்ரீ அண்டலஸ்

  • rajoo wrote on 7 December, 2012, 19:41ம இ கா காரணங்க ஆடு நலயுது என்று ஓநாய் வருத்தபப் பட்டுசான்.இது எல்லாம் எலக்ஷ்னுக்கு ஆடும் நாடகம் மக்கள் தெரியும் அதனால 150 பேர் மட்டும் கலந்து கொண்டாங்கள் வெற்றி பகாதனுக்கு தான் அது உறுதி வாழ்க பகாதனுக்கு

  • poornarao s”ban wrote on 7 December, 2012, 19:49ஒவ்வொரு முறையும் நம் தெரிந்தும் தெரியாமல் இன் நாட்டில் தவறு செய்துக்கொன்டுதான் வருகிறோம்.நம் உரிமை என்னவென்று தெரியாமல் தொட்டதுக்கெல்லாம் கண்டன ஆர்பாட்டம்.இப்படியே தொடர்ந்து செய்து கொண்டுப்போனால்,உண்மையாகவே சொல்கிறேன் பாதிப்பு அரசியல் உள்ளவர்க்கு அல்ல நமக்குத்தான்.ஊரு ரெண்டு பட்டால் குத்தாடிக்கு தன் கொண்டாட்டம் அவுவகையுள் நம் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும் இன் நாட்டு அரசாங்கம் கவனித்துக்கொண்டுதான் வருகிறது,ஆகா நமக்கு தேவை உள்ளதை ஆர்ப்படம் செய்தல் நமக்குத்தான் பெரும்மை.இல்லை என்றல்…..

Advertisements

கார்த்திகை

கார்த்திகக்கும் களங்கம் கற்பிக்கிறார்கள் மூடர்கள்!

சங்க இலக்கியத்தில் கார்த்திகை தீபம்

Post by சிவா on Tue Nov 27, 2012 10:49 pm

வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக்
கையற வந்த பொழுது – நற்றிணை 58

கார்த்திகை மாலை-விளக்கு
வீரை என்னும் ஊரிலிருந்துகொண்டு ஆண்ட வேளிர்குடி அரசன் வெளியன். அவன் மகன் தித்தன், அவன் முரசில் திரி போட்டு விளக்கேற்றி வைத்தான். மாலையில் அந்த விளக்கை ஏற்றியபோது வெண்சங்கு ஊதப்பட்டது. பனி பொழிந்தது. (இந்தக் காலத்தில் போருக்குச் சென்ற தன் தலைவன் மீள்வான் எனத் தலைவி நம்புகிறாள்.)

இது சங்க காலத்தில் நிகழ்ந்த கார்த்திகை விழா ஒளிவிளக்கை எடுத்துக்காட்டுகிறது.

~சங்க காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட புனித நாள், இன்று புதிய மூடர்களுக்கு அசிங்கமான நாளாகிவிட்டது! 😉

நவகிரகங்கள் பற்றிய அடிப்படை செய்திகள்

http://www.amanushyam.com/2011/07/blog-post_6585.html

~நவகிரகங்கள் ஒன்பதும் நவநாயகர்கள் எனப்படுவர்.

~சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்குத்தான் சொந்த வீடு (ஆட்சி) உண்டு. ராகு- கேதுக்களுக்கு ஆட்சி வீடு இல்லை

~நமது முன்னோர்களும் மெய்ஞ்ஞானிகளும் ஜோதிட சாஸ்திர மகான்களும் ராகு- கேதுக்களை சாயா கிரகங்கள் (நிழல் கிரகங்கள்) என்று எழுதி வைத்தார்கள்.

உண்மை இவ்வாறிருக்க, ராகுவும் கேதுவும் கிரகங்களா? எந்த கிரகம்? எங்கு உள்ளது? என நவீன விஞ்ஞானத்திலும் தெரிந்த அஞ்ஞானத்திலும், நமது முன்னோர்களின் மெய்ஞ்ஞானத்தை அளப்பது மூடத்தனம் !!!

மூடர்களே கற்றுத் தெளிவுறுங்கள்!

Benarkah Melayu Makin Kaya?

http://ob21.net/?p=2621

 

Benarkah Melayu Makin Kaya?

Kiriman oleh Zanuddin @ Obey_one pada April 26, 2012.
Disimpan dalam Pesan Berpesan, Semasa


Dr. Lim Teck Ghee, Pengarah Centre for Policy Initiatives (CPI) membuat kenyataan di Nanyang Siang Pau bahawa ekuiti korporat Bumiputera mungkin berada di tahap 45% dan bukannya 23.9% seperti yang diwar-warkan kerajaan.

Dalam ertikata lain, Dr. Lim mencurigai atau menuduh kerajaan sebagai ‘tersalah kira’ atau ‘berbohong’ kepada rakyat. Atas dasar apa Dr. Lim berkata demikian tidak pula dinyatakan dengan jelas. Maka, kita tidak dapat mengelak dari merasa curiga tentang kenapa Dr. Lim mencurigai kerajaan.

Mungkinkah ini satu lagi dari strategi tersusun pihak-pihak tertentu yang ingin menggugat kestabilan Malaysia semata-mata ingin menukar kerajaan? Jika benar, taktik membangkitkan rasa curiga, syak wasangka ini bolehlah dikatakan taktik paling kotor dan paling jahat.

Nampaknya, Dr. Lim seolah-olah berhujah dengan hanya merujuk kepada pandangan kasar dan rambang ketika memandu di sekitar bandaraya Kuala Lumpur. Benar, di sekitar KL kini kita boleh melihat banyak kereta-kereta mewah dipandu oleh orang Melayu. Begitu juga dengan rumah-rumah besar banyak juga yang dimiliki oleh orang Melayu. Perniagaan juga begitu, saban tahun semakin banyak syarikat bumiputera tersenarai di BSKL.

Sebagai hujah balas, kita juga boleh memperdebatkan isu ini dari segi pandangan kasar atau rambang seperti juga hujah Dr. Lim. Dan jika kita berhujah tanpa prejudis atau niat jahat maka kita akan terpaksa mengakui bahawa di jalanraya di KL hari ini, pemandangan yang sering dilihat ialah dalam setiap 100 biji kereta mewah di jalan raya, 70% – 80% dimiliki oleh orang Cina. Begitu juga dengan rumah-rumah besar dan syarikat-syarikat besar.

Berapa kedai milik Melayu boleh dilihat di KLCC? Tidak ada. Berapa kedai milik Melayu di Alamanda? Mungkin satu sahaja iaitu restoran beriani. Berapa pula di Subang Parade, Empire, The Curve, One Utama? IOI Mall? Kita minta Dr. Lim buat kajiselidik dan jawab sendiri.

Bagaimana pula dengan rumah-rumah kedai atau pusat perdagangan? Khasnya di Petaling Jaya, Subang Jaya, Damansara, Mont Kiara, Seri Hartamas, Seri Kembangan? Jika disenaraikan semuanya, kita akan dapati bahawa perniagaan atau hartanah kedai/kilang yang menjadi milik Melayu tidak mustahil hanya terdapat dalam 10% atau kurang.

Pemandangan yang sama juga dilihat di seluruh bandar-bandar utama negeri-negeri di Malaysia.

Selebihnya, Melayu lain berada di kampung, bertani, menjadi nelayan atau paling hebat pun bekerja kilang yang mana pendapatan bulanan mereka mungkin hanya 1% dari pendapatan purata bulanan kaum Cina dengan taraf hidup sederhana di bandar. Walaupun semakin ramai orang Melayu berniaga hari ini, namun saiz perniagaan mereka hanyalah setakat gerai-gerai, pasar malam, pasar tani dan perniagaan kecil atau sederhana.

Justeru, dari mana Dr. Lim mendapat angka bahawa Melayu sudah cukup kaya dengan pemilikan ekuiti korporat sehingga 45%?

Hakikatnya, walaupun taraf hidup segelintir Melayu semakin meningkat tetapi rata-ratanya mereka masih jauh ketinggalan, malah sasaran 30% pemilikan ekuiti Bumiputera menjelang 2020 juga masih samar. Lebih memburukkan keadaan apabila kaum Cina yang telah sedia selesa menggenggam ekonomi Malaysia pula berada dalam kedudukan berkuasa untuk menekan atau memanipulasi peluang bumiputera yang menjadi pesaing dalam perniagaaan mereka.

Ini menyukarkan lagi orang Melayu untuk mencapai sasaran yang ditetapkan.

Sepatutnya, jika Dr. Lim atau mana-mana kaum Cina tidak senang dengan peningkatan Melayu dan ingin menghapuskan segala apa yang dilihat sebagai bantuan atau tongkat kepada Melayu maka mereka wajar membantu kerajaan meningkatkan kekuatan ekonomi bumiputera dan bukannya menghalang atau mengsabotaj usaha kerajaan ke arah itu.

Ini kerana jika kaum Cina turut memainkan peranan mereka bagi mendokong aspirasi kerajaan tentulah sasaran 30% tersebut akan dapat dicapai dengan lebih cepat. Dan jika sasaran tersebut tercapai, maka impian untuk membuang tongkat orang-orang Melayu bolehlah direalisasikan dengan seberapa segera.

Hari ini, pemilikan ekuiti Bumiputera telah meningkat daripada 21.9 peratus bernilai RM127.4 bilion pada 2008 kepada 23.09 peratus dengan nilai RM167.7 bilion. Antara pemilikan ekuiti Bumiputera mengikut sektor ialah dalam bidang kewangan, insurans dan takaful yang meningkat kepada 37.56 peratus bagi 2009 dan 38.97 peratus pada 2010. Sektor perdagangan borong dan runcit pula adalah industri yang mempunyai bilangan syarikat Bumiputera tertinggi berbanding industri lain.

Ekonomi Melayu yanag semakin meningkat dan ekonomi Cina yang telah sedia dan semakin kuat, dengan sendirinya membuktikan bahawa kerajaan yang ada hari ini tidak pernah meminggirkan sesiapa. Justeru, entah kenapa kaum Cina terus bersikap dengki khianat dan tamak haloba dalam memperkatakan soal ekonomi sedangkan mereka telah pun berada jauh di atas dari kaum bumiputera.

TAK AKAN MELAYU HILANG DI DUNIA (~tunggu dan lihat lar)

http://chedet.cc/blog/?p=833#comment-141755

 

TAK AKAN MELAYU HILANG DI DUNIA

1. Kata Hang Tuah “Tak akan Melayu hilang di dunia.” Dapatkah kata-kata keramat ini menentu yang Melayu tak akan hilang di dunia?2. Di Singapura kerana tidak ada lagi sekolah Melayu dan bahasa penghantar di sekolah-sekolah di Republik itu ialah Inggeris dan China; segala urusan rasmi dan tidak rasmi menggunakan Bahasa Ingggeris atau China, maka orang Melayu sudah pun tidak menggunakan Bahasa Melayu. Mereka menggunakan Bahasa Inggeris walaupun semasa bercakap dengan anak pinak, keluarga dan kawan-kawan Melayu.

3. Budaya, adat istiadat Melayu juga terhakis. Yang tinggal hanyalah agama Islam mereka.

 

4. KeMelayuan mereka sudah tinggal separuh. Kita boleh ramal yang hakisan keMelayuan mereka akan berterusan sehingga akan hilanglah Melayu di Singapura.

5. Di sebelah utara pula kita dapati orang keturunan Melayu yang tidak dapat bertutur kata dalam Bahasa Melayu. Mereka Islam dan bangsa rasmi mereka ialah Thai. Maka hilanglah juga Melayu disitu.

6. Tetapi di Malaysia juga kehilangan Melayu sedang berlaku. Ada anak muda Melayu yang tidak lagi ingin dikenali sebagai orang Melayu. Mereka orang Malaysia. Ada pula yang hanya akui mereka orang Islam dan tidak perlu dikaitkan diri mereka dengan kaum Melayu.

7. Tetapi yang akan menghilangkan Melayu di dunia ialah dakwaan bahawa sesiapa yang bercakap berkenaan dengan bangsa Melayu, mereka akan dituduh “racist”. Oleh itu orang Melayu sudah tidak lagi berani menyebut perkataan Melayu kerana tidak mahu dituduh “racist”.

8. Kasihan Hang Tuah. Besar kemungkinan kata-katanya tidak lagi akan menjadi kenyataan. Demikianlah apabila kita bergantung kepada kata-kata hikmat untuk nasib kita, akhirnya akan hilang hikmatnya.

அம்னோ இந்தியர்களை அரசியல் பலம் அற்றவர்களாக ஆக்கிவிட்டது!

அம்னோ இந்தியர்களை அரசியல் பலம் அற்றவர்களாக ஆக்கிவிட்டது!

-செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன், ஆகஸ்ட் 30, 2012.

பொதுச் சேவை துறை, அண்மையில் தொழிற்துறை அமைச்சுக்காக 21 பட்டதாரிகளை தேர்வு செய்துள்ளது. அதில் ஒருவர் கூட இந்தியர் இல்லை! இது  குறித்து சென்ற வாரம் வருத்தம் தெரிவித்திருந்தார் ம.இ.கா. தலைவர்  ஜி. பழனிவேல்.

அதே வாரத்தில், அரசாங்க முகப்பு சேவைகளில் உள்ள இந்திய ஊழியர்களின் எண்ணிக்கையை 1000-லிருந்து 3000 ஆக உயர்த்துவதாக பொதுச் சேவை துறை விடுத்திருந்த அறிவிப்புக்கு பழனிவேல் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

இப்படி சூழ்நிலைக்கு ஏற்றவாறு தாளம் போடுவதைவிட ம.இ.கா. தலைவர் இந்தியர் உரிமையை நிலைநாட்டுவதே விவேகம். முகப்பு சேவை எதற்கு?

“குறிப்பிட்ட இந்த அலுவலகத்திலும் ஓர் இந்தியர் (பெண்) இருக்கின்றார்” என வாசலில் வருவோர் போவோருக்கு நாடகம் காட்டவா? தரமான பதவியில் அமர படித்த  இந்திய இளைகர்களுக்கு தகுதி இல்லையா?

நிரந்த அரசாங்க ஊழியர்களாக இந்தியர்கள் வேலைகளில் அமர்த்தப்படுவது  இல்லை. மாறாக பெரும்பாலோர் ஒப்பந்த அடிப்படையிலேயே (Contract Workers) சேர்க்கப்படுகின்றனர்.

இந்நாட்டில் ஒரு காலத்தில் இந்தியர்கள் மருத்துவ, கல்வித்துறைகளில் மேலோங்கி இருந்த போது, அவை உலகத் தரம் பெற்றிருந்தன. ஆனால் இப்போது அதெல்லாம் எழுதப்படாத வரலாறாகிவிட்டது. மலேசிய இந்தியர்கள் இவற்றையெல்லாம சீர்தூக்கி பார்த்து சமூகத்திற்கு சீர்மை கொண்டுவரவேண்டும்.

அரசு சேவைகளில் இந்திய ஊழுயர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அறிவிப்பு வரும்போதெல்லாம் ம.இ.கா. ஆனந்த ராகம் பாடும். ஆனால் அறிவிப்பு செயல் வடிவம் பெறாத போது அது மௌன ராகமாகிவிடும். இந்திய சமூகத்துக்கு எத்தனையோ முறை வெற்று வாக்குகுறுதிகள் அளிக்கப்பட்டிருந்தும்  ம.இ.கா, ம.மு.க. மற்றும் இதர சில்லறை கட்சிகள் இன்னமும் தே.மு.வை வழிநடத்தும் அம்னோவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகின்றன.

1971-ல் அரசு சேவையில் இந்தியர்கள் 17.4 விழுக்காட்டினர் இருந்தனர். ஆனால் 2005-ல் அது 5.12%-டாக சரிந்து தற்போது 4.1% ஆக உள்ளது! இந்த எண்ணிக்கை கூட தமிழ்ப் பள்ளிகள் இன்னமும் உயிரோடு இருப்பதால்தான். (எண்ணிக்கையில் ஆசிரியர்கள் உள்ளிட்டிருப்பதால்). போலீஸ் துறையில் நம்மவர்களின் விழுக்காடு 3!

தொடக்கக் காலம் முதல் இந்தியர்களின் முழு ஆதரவு இருந்தும், அம்னோவும், ம.இ.கா-வும் அவர்களை ஏமாற்றிக்கொண்டுதான் வந்துள்ளன. 2008-ம் ஆண்டில்  பாடம் கற்பிக்கப்பட்டும் மாற்றமில்லை. அம்னோ தனது இனவாத போக்கையும் இறுமாப்பையும் இன்னும் கைவிடவில்லை.

அரசாங்க வேலைகளுக்கு இந்தியர்கள் விண்ணப்பம் செய்வதில்லை என அரசாங்கம் சாக்கு போக்கு சொல்லலாம். ஆனால் அரசுத் துறையில் உள்ள மலாய் அல்லாதாருக்கு நன்கு தெரியும் – எவ்வளவு எளிதாக இந்தியர்களின்  விண்ணப்பங்கள் குப்பைக் கூடைகளில் போய் விழுகின்றன என்று. உலக நாடுகளில் மலேசியாவில் மட்டுமே அரசாங்க வேலைகளுக்கு ‘இனம்’ முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. விண்ணப்பித்தவரின் கல்வித் தகுதியோ, செயல் திறனோ கருத்தில் கொள்ளப்படுவதில்லை. மலேசியா  திறமைசாளிகளையும், வல்லுனர்களையும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு,  சட்டவிரோத அந்நிய தொழிலாளர்களை இறக்குமதி செய்கின்றது.

மலேசியவில் தேசிய பொருளாதாரக் கொள்கை (NEP) அமலில் இல்லை என்றால் 5 மடங்கிற்கும் மேலான அந்நிய முதலீட்டை அது  ஈர்க்க முடியும் என உலகப் பொருளக அறிக்கை ஒன்று கூறுகிறது. 15 லட்சம் மலேசிய நிபுணர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர். அவர்களில் ஏறக்குறைய பாதிப் பேர் சிங்கப்பூரில் சொகுசாய் பணிபுரிகின்றனர்.

நிலைமை இவ்வாறு இருக்க, உலகத் தர பொதுச் சேவையை ஏற்படுத்த அரசாங்கம் கனவு காண்கிறது. அம்னோவின் ஆளுமை இருக்கும் வரையில் அது சாத்தியம் ஆகாது.  ம.இ.கா. இதுவரை நாடற்றவர்கள், குற்றவாளிகள், ஏழைகள், திறனற்ற இந்தியர்களை உருவாக்குவதில்தான் வெற்றி கண்டுள்ளது. இந்திய சமூகத்துக்கு அரசியல் மாற்றம் தேவைப்படுகிறது. தற்போதைய அரசியல் முறை இந்தியர்களை ஓரங்கட்டி புறக்கணிக்கின்றது. அரசியலில் இந்தியவர்கள் பலமற்றவர்களாக இருக்க வகை செய்கின்றது.

அம்னோவுக்கு இந்தியர்களின் வாக்குகள்தான் முக்கியம். தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் அதற்கு அக்கறை இல்லை. நாட்டின் வலிமையை இந்தியர்களோடு பங்கிட்டுக்கொள்வதிலும் அதற்கு உடன்பாடு இல்லை. இந்தியர்கள் யாசகர்கள்! அரிசி மூட்டையும், பழக்கூடையும் கொடுத்தால் போதும். அவர்களுக்கு நல்ல தொழிலும் வாணிக வாய்ப்பும் தேவையில்லை என அம்னோ கருதுகிறது.

கடந்த 55 ஆண்டுகால அம்னோ-ம.இ.கா. கூட்டு நட்பில் இந்தியர்களுக்குக் கிடைத்த ‘நற்கதி’ இதுவே!

இந்நிலை மாற வேண்டும். அரிசியல் ரீதியில் இந்தியர்கள் தங்கள் உன்னதப் பங்கை நிலைநாட்டி நாட்டின் வளர்ச்சிக்கு மீண்டும் நாடியாய் இருக்க வேண்டும். அதே வேளை தங்கள் உயிருக்கும் மேலான கௌரவத்தையும் தன்மானத்தையும் இந்தியர்கள் மீட்க வேண்டும்.

அது இப்போது இல்லையெனில் பின் எப்போது?

 

 

SHARE THIS STORY :    

Related Posts

  பினாங்கு அம்னோ தலைவர்: 13வது பொதுத் தேர்தல் இவ்வாண்டு இல்லை

  அம்னோ உறுதியாக நின்று நிலைத்திருக்கப் போராட வேண்டும் என்கிறார் ஸாஹிட்

  போலி அம்னோ இளைஞர் முகநூல் பக்கம் பற்றி பிஎன் போலீசில் புகார் செய்யும்

  உதட்டளவிலான “மாற்றமும்” “நம்பிக்கையும்” உதவாது, ஹிண்ட்ராப்

  பாஸ்: ஹுடுட் மீதான அம்னோ நிலை டிஏபி-யை விட மோசமானது

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share your comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுறுக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி. – ஆசிரியர்

2 Comments on “அம்னோ இந்தியர்களை அரசியல் பலம் அற்றவர்களாக ஆக்கிவிட்டது!”

  • Veeriah Balakrishnan wrote on 30 August, 2012, 18:47மகிழ்ச்சி  வருத்தம் கோபம்  லோபம் இதெல்லாம் இந்திய தலைவர்களுக்கு வாய் கிழிய  பேசி பழக்க பட்டவர்கள் , கொடுத்ததை   வாங்கி கொண்டு வாக்கு சாவடியில் அதிருப்தியை காட்டுவார்கள் இந்தியர்கள்!!!

  • seelan wrote on 30 August, 2012, 23:08ஐயா நிங்களும் புள்ளி விவரம் சரியாக சொல்லறிங்க …..அனா இந்த மஇகா மாற மண்டைகளுக்கு இது புரியா வில்லையே……