தேடலில் விடைகொடு…

தேடும்மனம்

விரல்தொட ஏங்கும்…

(…)

 

தேயும்நம்பிக்கையில்

விழுந்துவிட்டு

தேடலில்

விரக்திபெற்று

தேடலைநான்

விட்டுவிட்டால்…

 

தேடியதும்

விடவில்லை

தேடும்மனதும்

விடவில்லை

தேடிமீண்டும்

விரைகிறேன்

தேடித்தேடி

விழுகிறேன்…

 

தேவதையே

விழைகிறேன்

 

தேடுவதை

விளங்கிக்கொள்

தேடும்எனை

விரும்பிக்கொள்

தேடித்தேடி

விழும்எனக்கு

தேடலில்நீ

விடைகொடு…

 

தேடும்விடைவர

வில்லையென்றால்

தேடுவதை

விடமாட்டேன்

தேடுவதைத்தொடருவேன்

விரைந்துவரும்ஜென்மத்திலும்…

(…)

 

தேயும்மனதாய்

விடைபெறுகிறேன்…